;
Athirady Tamil News

பஸ்ஸில் பயணித்த மாணவனின் கை வீதியில் விழுந்தது..!!

0

பஸ்ஸில் பின்னிருக்கையில் யன்னல் ஓரமாக அமர்ந்து, யன்னலுக்கு வெளியே கையை போட்டுக்கொண்டு பயணித்த, பல்கலைக்கழக மாணவனின் கையை, டிப்பர் வாகனம் துண்டாடிய சம்பவமொன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனின் கை​யே இவ்வாறு துண்டாடப்பட்டுள்ளது.

துண்டாடப்பட்டு வீதியில் கிடந்த மாணவனின் கையுடன், அந்த மாணவன், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இரத்தினபுரி-பதுளை வீதியில், பெல்மதுளை சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியிலேயே, இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − one =

*