;
Athirady Tamil News

ரஞ்சன் டி சில்வா படுகொலை: குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு மாற்றம்..!!

0

தெஹிவளை கல்கிசை மாநகர சபை மேயரும், இலங்கை கிரிக்கட் அணியின் வீரர், தனஞ்சயன் டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வா படுகொலை தொடர்பான விசாரணைகள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பில், அங்குலான பிரதேசத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை (31) சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்படிருந்தார். சந்தேகநபர் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மற்றுமொரு சந்தேக நபரான, நிஹால் திசாநாயக்க அலியாஸ் என்கிற பெபா இரத்மலானையின் முச்சக்கர வண்டியொன்றில் ஹெரோயினுடன் பயணித்துக்கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டிருந்தார்.

ரஞ்சன் டி சில்வா கடந்த மாதம் 24 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு பிரயோகத்தில் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + thirteen =

*