;
Athirady Tamil News

செய்யாறு அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை..!!

0

செய்யாறு தாலுகா கீழப்பழந்தை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 32), பஸ் டிரைவர். இவரது மனைவி சூரியா (29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் கவிதா என்ற பெண் குழந்தையும், 1½ மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.

கணவன் – மனைவிக்கு இடையே வரதட்சணை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சூரியா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீயில் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சூரியாவின் தாயார் சாந்தி செய்யாறு போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்துகொண்ட சூரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் ஆர்.அன்னம்மாள் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*