;
Athirady Tamil News

மெர்க்கலிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தாரா அவர் தந்தை? வெடித்த சர்ச்சை..!!

0

மேகன் மெர்க்கலிடம் அவர் தந்தை தாமஸ் பணம் கேட்டார் என்ற செய்தி வெளியான நிலையில் அதை தாமஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், மேகன் மெர்க்கலுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய சூழல் இருந்ததால் மெர்க்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மெர்க்கலிடம் தாமஸ் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும், பணம் தர மெர்க்கல் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் உலா வந்தன

இது ஒரு வதந்தி என தாமஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.அவர் கூறுகையில், மெர்க்கலிடம் நான் பணம் கேட்டதாக வரும் வதந்தியில் உண்மையில்லை.

எனக்கு ஓய்வூதிய பணம் வருகிறது, அதுவே என செலவுகளுக்கு போதுமானது.நான் மெர்க்கலுடன் பணம் குறித்தே பேசமாட்டேன், அப்படி நான் ஒருவேளை மெர்க்கலிடம் பணம் கேட்டால் அவர் தர மறுக்க மாட்டார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*