;
Athirady Tamil News

பிரபல வங்கி கொள்ளையனுக்கு வேலை வாய்ப்பு அளித்த சுவிட்சர்லாந்து..!!

0

சுவிட்சர்லாந்தின் பிரபல வங்கி கொள்ளையனுக்கு சூரிச் நகரம் நிரந்தர வேலை வாய்ப்பை அளித்துள்ளது.சுவிட்சர்லாந்தில் தொடர் வங்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் Hugo Portmann. இவர் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட 35 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலையான Hugo Portmann திருந்தி வாழ முடிவு செய்து முதன் முறையாக வேலை தேட ஆரம்பித்துள்ளார்

இந்த நிலையில் சூரிச் நகரின் குப்பை அள்ளும் பிரிவில் அவருக்கு பணி கிடைத்துள்ளது.

வேலை தேடத் தொடங்கியதும், தம்மைப் போன்ற நபர்களுக்கு சமூகம் வேலை வாய்ப்பை வழங்குமா என Hugo Portmann சந்தேகப்பட்டுள்ளார்.

ஆனால் சூரிச் நகர சபையின் தலைவர் Filippo Leutenegger இந்த வேலை வாய்ப்பை Portmann-கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 19 =

*