;
Athirady Tamil News

கார் என்ஜினுக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு: வைரல் வீடியோ..!!

0

தாய்லாந்தில் காரின் என்ஜினுக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

காரின் பானட்டில் பாம்பின் வால் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்த காரின் சொந்தக்காரர் இது குறித்து வனத்துறையினருக்கு புகார் தெரிவித்திருந்தார்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்தில் விட்டனர்.

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக வெப்பமான பகுதி தேடிய மலைப்பாம்பு காரின் என்ஜின் பகுதி கதகதப்பாக இருப்பதால் அதனை தேர்ந்தெடுத்து அங்கு தங்கியிருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர்.

மேலும் சமீபமாக அப்பகுதியில் கோழிகள் பல காணாமல் போனதற்கு இந்த மலைப்பாம்புதான் காரணமாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 2 =

*