;
Athirady Tamil News

நண்பனின் நெஞ்சில் கத்தியை வைத்து பல முறை குத்திய கொடூர நண்பன்: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

0

ரஷ்யாவில் நண்பன் தாமதமாக வந்ததால், ஆத்திரத்தில் இவருக்காக காத்திருந்த மற்றொரு நண்பன் அவரை நெஞ்சில் கத்தியை வைத்து குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Tyumen பகுதியிலிருந்து சுமார் 700 மைல் பயணம் செய்து தன்னுடைய நண்பரை பார்க்க Kirov ரயில் நிலையத்திற்கு நண்பர் ஒருவர் வந்துள்ளார்.

ஆனால் அவரை அழைத்துச் செல்வதற்கு, அந்த நண்பர் வரவில்லை. ஒருநாள் தமாதமாக வந்த அந்த நண்பர், ரயில் நிலையத்தில் இவரிடம் அமர்ந்து பேசியுள்ளார்

அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் போயுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணம் செய்து வந்த நண்பர், அவரை பையில் வைத்திருந்த கத்தியால் வைத்து அவரின் நெஞ்சில் இரண்டு முறை குத்தியுள்ளார்.

இதில் ரத்த காயங்களுடன் அந்த நபர் அந்த இடத்திலே சுருண்டு கிழே விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இது குறித்து ரஷ்யா பொலிசாரிடம் கேட்ட போது அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*