;
Athirady Tamil News

உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் மும்பை வாசிகளே – ஆய்வில் தகவல்..!!

0

உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பது பற்றி சுவிசர்லாந்து வங்கி ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் மும்பை நகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 3,314.7 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்தவர்கள் ஒரு ஆண்டிற்கு 2511.4 உழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனோய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மும்பையை தொழிலாளர்கள் எவ்வளவு உழைத்தாலும் அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை எனவும், நியூயார்க் நகரில் 54 மணி நேரம் வேலை பார்த்து கிடைக்கிற சம்பளத்தை வைத்து ஒரு ஐபோன் X வாங்கிவிடலாம். ஆனால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ஐபோன் X மொபைலை வாங்க 917 மணி நேரம் உழைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் ஈட்டும் வருமானத்தின் அடிப்படையிலான உலக நகரங்களின் பட்டியலில் மும்பை 76-வது இடத்தில் உள்ளது. மும்பையில் வாழ்வதற்கு ஆகும் செலவு நியூயார்க்கில் ஆகும் செலவில் 46 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 11 =

*