;
Athirady Tamil News

வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பணிபறக்கனிப்பு..!! (படங்கள்)

0

அகில இலங்கை ரீதியாக நடைபெறும் அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கனிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று பணிபுறக்கனிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

தகுதிகான் காலம் நிறைவடைந்த 11 வகுப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய், 2018 ஜனவரி 10ம் திகதி வாக்குறுதியளித்த கெபினட் பத்திரிகைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கு, கணினி தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சீர் செய், 2012 பொறுப்பு பரீட்சையை நடைமுறைப்படுத்தல், பொறுப்பு கொ டுப்பனவை உடனடியாக பெற்றுக்கொடு, பொறுப்பு பரீட்சையில் சித்தியடைந்த 01ம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்என் – 7 வேதன மட்டத்தை பெற்றுக் கொடு, விரிவுரையாளர் கொடுப்பனவை புதிய சம்பளத்திற்கு பெற்றுக்கொடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினhல் நேற்று நள்ளிரவு 12.00 மணியில் இருந்து 05ம் திகதி நள்ளிரவு வரை நடைபெறவுள்ள இப்போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை பலர் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து திரும்பிச்செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் தபால் ஊழியர்களின் சேவைகள் மட்டும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + sixteen =

*