;
Athirady Tamil News

கடத்தல் சம்பவம் தொடர்பில் நகர சபை தலைவர் உட்பட நால்வர் கைது..!!

0

தலவாக்கலை லிந்துல நகர சபை தலைவர் அசோக்க சோபல கைது செய்யபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பொலிஸாரால் நேற்று (03) இரவு 09 மணி அளவில் தலவாக்கலை லிந்துல நகர சபையின் தலைவரை அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யட்டதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி அக்கரபத்தனை பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யபட்ட சம்பவம் தொடர்பில், தலவாக்கலை லிந்துல நகர சபையின் தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யபட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட தலவாக்கலை லிந்துல நகர சபையின் தலைவர் அசோக்க சோபல உட்பட மேலும் நான்கு பேர் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 5 =

*