சட்டத்தில் தளர்வு; பட்டதாரிகளின் வயதெல்லை அதிகரிப்பு..!!

பட்டதாரிகளை அரச சேவைகளில் இணைத்து கொள்வதற்கான வயதெல்லை, 45 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன் சந்திரா தெரிவித்தார்.
“அரச சேவைக்காக, 35 வயதுக்கும் கீழ்பட்ட பட்டதாரிகளை இணைந்துகொள்ளவேண்டும் என்ற சட்டத்தில் தளர்வு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த தளர்வு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அதற்கு அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வேலையற்ற பட்டதாரிகளில் 5,000 பேருக்கு, இம்மாத்தில் பயிற்சி நியமனம் வழங்கப்பட்டவுள்ளது. அத்துடன், இன்னும் 15 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில், பயற்சி நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலத்தின் போது, அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“அடுத்த வருடத்தில் மூன்று கட்டங்களின் கீழ், பட்டதாரிகளை அரச ஊழியர்களாக இணைந்துகொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.