;
Athirady Tamil News

25 அடி பள்ளத்தில் வேன் ஒன்று தடம் புரண்டு விபத்து..!!

0

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹோலிருட் பகுதியில் 25 அடி பள்ளத்தில் வேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (04) பிற்பகல் 2.30 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

வட்டகொடையில் இருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட இல்லை எனவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + eleven =

*