;
Athirady Tamil News

முதலமைச்சர் நிதியத்திற்கு உடனடியாக அனுமதி வழங்குங்கள்..!!

0

வட மாகாண சபையின் ஆட்சிக்காலம் 30.09.2018உடன் முடிவுறுகிறது. அதற்கு இன்னும் 04 மாதங்களே உள்ளன. ஆனால் முதலமைச்சர் நிதியத்திற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. நான் அறிந்த வரையில் கடந்த முன்றரை வருடங்களுக்கு முன்பாக இதற்கான நியதிச் சட்டங்கள் வட மாகாண சபையினால் விவாதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றுப்பட்டு ஆளுநரின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் சட்ட மா அதிபரின் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

போரினாலும் மற்றும் இடம் பெயர்வுகளினாலும் முற்றாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட மக்களும் இதிலிருந்து இன்னும் மீளவில்லை. இதேவேளை இடையிடையே மழை,வெள்ளம் வறட்சி என இயற்கை பேரிடர்கள் என்பனவும் பெரியளவிலான பாதிப்புக்களை கொடுத்த வண்ணமேயுள்ளன. மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயர்வடைந்து எமது மக்களை பல்வேறு வழிகளிலும் தலையெடுக்க முடியாமல் செய்துள்ளது. மக்கள் தனது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் உயிரிழப்பு,அங்கவீனம், விதவைக் கோலம் சொத்து இழப்பு, தொழில் வாய்ப்பின்மை இன்னும் துன்பத்திலுள்ளார்கள். எமது மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுபும் அதே வேளை வடக்கு மாகாணத்தில் தொழில் துறையை அபிவிருத்தி செய்வதும் அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதும் வட மாகாணத்தின் கடமை. அந்த கடமையை செய்வதற்கு வட மாகாணம் தயாராக இருக்கிறது.

அதற்கு தேவையான போதியளவு நிதியை பெற்றுக்கொள்வதற்காகவே வடக்கு மாகாணம் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு அனுமதி கோரியிருக்கிறது.
அந்த அனுமதியை வழங்குவதன் மூலம் எமது மாகாண மக்களினதும் நாட்டினதும் பொருளாதாரம் அபிவிருத்தியடையும். “யாணைப் பசிக்கு சோளப்பொரி” வழங்கப்பட்ட நிலை கூட இல்லை அது கிடைத்திருப்பின் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகள், இந்தியா உட்பட வெளிநாட்டு நிதிகளும் பெறப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், வீடமைப்பு தொழில் முயற்சி என்று பலவற்றை செய்து எமது மக்களை ஓரளவுக்காவது சுபீட்சமடையச் செய்திருக்கலாம்.

குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் முழுமையாகவும் மன்னார் மாவட்டத்தின் பெரும் பகுதி மக்களும் யாழ் மாவட்டத்தினதும் வவுனியா மாவட்டத்தினதும் ஒரு பகுதி மக்களும் 2008ஃ2009 இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட அவலங்களை உலகமேயறியும். போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டபோதும் இன்றுவரை அவர்கள் குடும்ப வாழ்வைக் கொண்டு நடத்த முடியாது மீளாத் துன்பத்திலுள்ளார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தே நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக்கினோம். ஆனால் இன்று “வேண்டாப் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்” என்று ஒரு கட்சியின் சில அரசியல்வாதிகளால் கேலிகூத்தாக்கப்படுகிறது. செம்மறியாட்டுக் கூட்டம் அவர்கள் சொல்வதற்கு “ஆமா சாமி” போடாவிட்டால் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படாது. மாகாண சபையில் முதலமைச்சராகவோ,அல்லது அமைச்சர்களாகவோ ஆக முடியாதது மட்டுமல்லாது மாகாண சபை உறுப்பினர்களாகக் கூட சிறப்பாகச் செயற்பட முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களே! தயவு செய்து இந்த இழிநிலைபற்றி சற்று சிந்தியுங்கள்!

வட மாகாண முதலமைச்சர் அவர்கள், கணடா,லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்ற காலங்களின்போது எமது புலம்பெயர் மக்களால், வழ்ஙகப்பட்ட பெருமளவு நிதி இன்று வரை எமது மக்களுக்கு கிடைக்க முடியாதுள்ளதாக அறிகிறோம். முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி கிடைத்;தால் மட்டுமே இப்படிப்பட்ட நிதிகள் எம் மக்களை வந்தடையும். ஆனால் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பாகவும் வேகமாகவும் செயற்படக்கூடாது என்பதற்காகவும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காவும் மாகாண சபையில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் போடும் முட்டுக்கட்டைகளை மக்கள் அறிவார்கள. அத்துடன் தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அரச அதிகாரிகளையும் முதலமைச்சருக்கு ஒத்துழைக்காது தடுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயம். அதை விட மத்திய அரசிலும் செல்வாக்கு செலுத்தி இந்த முதலமைச்சர் காலத்தில் முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைக்கக்கூடாது என்று சிலர் செயற்படுகின்றார்களோ என சிந்திக்க வேண்டியுள்ளது.

எனவே பின்வருவோரிடம் எனது அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
01) மீண்டும் வட மாகாணத்திற்கென நியமிக்கப்பட்ட ஆளுநர் அவர்களே! தயவு செய்து நீங்கள் துரிதமாக செயற்பட்டு அதிமேதகு ஜனாதிபதி , மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரிடம் பேசி உடனடியாக முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை பெற்றுக்கொடுங்கள். ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையா?
02) நல்லாட்சி அரசின் பிரதான பாத்திரங்களை வகிக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே! உடனடியாக மத்திய அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை வட மாகாணத்திற்கு வழங்குங்கள்!
03) புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களே! தாங்கள் துரிதமாக செயற்பட்டு முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி கிடைப்பதற்கு ஒத்துழையுங்கள்!

04) வட மாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே! பாராளுமன்றத்தில் முதலமைச்சர் நிதியத்தின் அனுமதிக்;காக உடனடியாக ஒற்றுமையாக குரல் கொடுப்போம்.! நாம் அனைவரும் எமது மக்களுக்காக இந்த முயற்சியில் ஒன்றுபட்டு செயற்படுவோம்!
05) எதிர்கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்களே! நீங்கள் உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி இந்த நிதியத்திற்கான அனுமதியைப் பெற வட மாகாண முதலமைச்சருக்கு ஒத்துழையுங்கள்! பாராளுமன்றத்திலும்; இதற்கு வலுவாக குரல் கொடுங்கள்.!

06) இவை அனைத்துக்கும் மேலாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களே! மற்றும் சகோதர இன மக்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செய்தி ஊடகங்கள் மற்றும் கேரிக்கைகள் ஊடாக கொடுக்கும் அழுத்தங்கள் எமது முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதியைப் பெற்றுத் தரும். எனவே அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுங்கள்.

07) செய்தி ஊடகங்கள் மற்றும் ஊடகவியாளர்களே! முதலமைசசர் நிதியத்திற்கு அனுமதி கிடைக்க ஊடகம் என்ற மிகப் பெரிய ஆயுதம் மூலம் உங்கள் பங்களிப்பை செவ்வன வழங்குங்கள்! இது தொடர்பான செய்திகள் கட்டுரைகளுக்கு முக்கியத்தும் கொடுங்கள்!

மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளபோதும் இன்று நாடாளுமன்றத்தில் பேச முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளேன். இருந்தும் மக்களும் செய்தி ஊடகங்களுமே எமது பெரும் பலமாகும். எனவே எமது மக்கள் மீது நான் கொண்டுள்ள கருசனைகளையும் எமது மக்கிளின் பிரதிநிதியாக நான் செயற்படவேண்டிய கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 14 =

*