;
Athirady Tamil News

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கருவிகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்..!!(படங்கள்)

0

கிளிநொச்சி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கருவிகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் பரந்தனில் இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜம்பது முச்சக்கர வண்டிகளுக்க முதற்கட்டமாக மீற்றர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் கருவிகள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீற்றர் கருவிகள் பொருத்திய பின்னர் முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் அடுத்து வருகின்ற கிலோ மீற்றர் ஒவ்வொன்றுக்கும் 50 ரூபா வீதமும் அறவிடப்படும் எனவும். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*