;
Athirady Tamil News

ம.பி. விவசாயிகள் போராட்டத்தில் சங்கத்தின் துணை தலைவர் இன்று மாரடைப்பால் பலி..!!

0

மத்தியப்பிரதேசம் மாநில விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த பத்து நாள் தொடர் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த முதல்தேதி தொடங்கியது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.

இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இம்மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது. இன்றிலிருந்து தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மற்றும் பால் போன்றவற்றை சந்தைகளுக்கு அனுப்ப கூடாது என சங்கத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி, பால் மற்றும் தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலைகளும் கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தடையை மீறி நீமுச் பகுதியில் சிலர் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பால் உற்பத்தியாளர்கள் பலர் சாலைகளில் பாலை கொட்டி அரசுக்கு எதிரான தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பிரஜாபதி நகர் ரெயில் நிலைய சந்திப்பின் அருகே பன்டாரா சாலையில் இன்று நான்காவது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் சங்காத்தனா அமைப்பின் துணை தலைவர் ஷரத் கேடிக்கார் மாரடைப்பால் உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 6 =

*