துப்பாக்கிகளுடன் இருவர் கைது..!!

இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கஹவத்தை அட்டகலபன்ன பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து உள்நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும் டி 56 ரக துப்பாக்கியின் 03 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அந்த துப்பாக்கி கைது செய்யப்பட்ட சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டதென்று தெரிய வந்துள்ளது.
அதேவேளை சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மற்றொரு நபர் கஹவத்தை கஹவத்துகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.