;
Athirady Tamil News

வவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் பொலிசாரால் மீட்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஏ9 வீதியில் வைத்து இன்று (05) காலை குறித்த மாடுகள் ஓமந்தைப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சிறிய கப் ரக வாகனத்தில் 5 மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. இதனை சோதனை செய்த ஓமந்தைப் பொலிசார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*