;
Athirady Tamil News

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட செயலகம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கினைப்புக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றாடல் தினம் இன்று 05.06.2018 காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசல் ஸ்தலம் அமைந்துள்ள வளாகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ். சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.

‘ பிளாஸ்ரிக் மாசாதலை இல்லாது ஒழிப்போம்’ எனினும் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக யாழ்வளாக மாணவர்கள் பிளாஸ்ரிக் குறித்த விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். இவ்வருடம் இலங்கையில் உலக சுற்றாடல் தினம் பிளாஸ்ரிக் மாசாதலை இல்லாது ஒழிப்போம் எனினும் தொனிப் பொருளில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன. மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார். வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் திரு. எஸ். சிவகரன், மாவட்ட திட்டப்பணிப்பாளர். மாவட்ட கணக்காய்வாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா வளாக பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள். மாணவிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தின்; வளாகத்தில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*