;
Athirady Tamil News

வவுனியா விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் சபாரி மோட்டார் சைக்கிளில் தச்சுத் தொழிலுக்குச் சென்ற துரைச்சாமி திருநாவுக்கரசு என்ற 53 வயது குடும்பஸ்தர் வீதியில் நின்றுஉகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் என்ற 48 வயது குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் நின்றிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*