;
Athirady Tamil News

வவுனியா ஓமந்தையில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பொலிசாரால் மடக்கி பிடிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கடப்பட்ட பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை ஓமந்தைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை குறித்த முதிரை மரக்குற்றிகள் ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் வீதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் பகுதியில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜே.எஸ். பொன்சேகா அவர்களின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சிறியரக பிக்கப் வாகனம் ஒன்றில் ஏற்பட்ட 10 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிசாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + sixteen =

*