;
Athirady Tamil News

மருந்தின்மையால் அவதியுறும் நோயாளர்கள்..!!

0

கண்டி வைத்தியசாலையில் சிறுநீரகக் கோளாறுடைய நோயாளர்களுக்கான செலோஷன் என்ற மருந்து வகைக் கிடைக்கப் பெறாமையால், நோயாளர்கள் பெரும் இன்னல்களுக்குட்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகக் கோளாறுடைய நோயாளர்களின் இரத்தம் சுத்தம் செய்யப்படுவதற்கு இம்மருந்து தேவைப்படும் நிலையில், குறித்த வைத்தியசாலையின் மருந்து களஞ்சியங்களில், இம்மருந்து வகை இல்லையெனவும், அத்துடன் இந்நிலைமை சில மாதங்களாக தொடர்வதால் நோயாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருத்துவ விநியோகப் பிரிவின் நிறைவேற்று அதிகாரி, லால் பனாப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில், குறித்த பிரச்சினைத் தொடர்பாக விரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + seven =

*