;
Athirady Tamil News

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!!

0

கொழும்ப – காலி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 29 வயதுடைய அசாங்க கெலும் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையாற்றி வந்த பொலிஸ் நிலையத்துக்கு, தேவையான கணனி பாகங்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்களில் சென்றுக் கொண்டிருக்கும்போது லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + two =

*