;
Athirady Tamil News

கோட்டக்குப்பம் அருகே 1½ வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்..!!

0

புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 22). இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். ஆனந்தி தனது கை குழந்தையுடன் தாய் அம்சவேணி வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ஆனந்தி தனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை.

வீட்டில் ஆனந்தி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தன்னை யாரும் தேட வேண்டாம். குழந்தையுடன் விடுதியில் தங்க போகிறேன். என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அம்சவேணி கோட்டக்குப்பம் போலீசில புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 8 =

*