;
Athirady Tamil News

மட்டு. நகரில் இருநேர திண்மக் கழிவகற்றல் திட்டம் ஆரம்பம்..!!

0

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரிவில் காலை மாலை இருநேர திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் வசிக்கும் பொது மக்களினதும் மற்றும் நகருக்கு நாளாந்தம் வந்து செல்லும் ஆயிரக்கணக்கானோரினதும் நலன் கருதி வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்க இந்த சேவையை நாளை (புதன்கிழமை ) முதல் ஆரம்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்நோயைக் கட்டுப்படுத்தும் விசேட செயலணியின் செயற்திறனை மீளாய்வு செய்யும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றது. அக்கூட்டத்திலிலேயே அவர் ,இவ்வாறு தெரிவித்தார்,

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”இதுவரையில் காலையில் மாத்திரம் இடம்பெற்ற திண்மக் கழிவு முகாமைத்தும் நகரில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான புளியந்தீவு, கோட்டைமுனை, வெட்டுக்காடு ஆகிய பொதுச் சுகாதாரப் பிரிவுகளை உள்ளடக்கிய சுகாதார வலயங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் ,இடங்களான பஸ் நிலையம், பூங்காக்கள், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் அதிகமாக நாடிச் செல்லும் மட்டக்களப்பு நகரின் மரபுரிமைமிக்க ,இடங்கள், பொதுச் சந்தை, வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களின் நிலைகள் மீளாய்வு செய்யப்பட்டன.

அத்தோடு வாவியோரங்கள், களப்புகள், வடிகான்கள், குடியிருப்புப் பகுதிகள் என்பனவற்றில் வழமையாக மேற்கொள்ளப்படும் திண்மக் கழிவு முகாமைத்துவ சேவைகளின் வினைத்திறன் என்பனவற்றை செயற்படுத்தும்போது முகம் கொடுக்கும் சவால்கள் மற்றும் அவற்றிக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன” என்றார்.

இக்கூட்டத்தில் பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், உறுப்பினர்களான யூ. பிலிப், ஆர். அசோக் மற்றும் சுகாதாரப் பிரிவின் முகாமைத்துவ உதவியாளர் பி. எஸ். ராஜகுலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 8 =

*