;
Athirady Tamil News

பிரித்தானியாவில் சூதாட்டத்தில் £80,000 தொகையை இழந்த 13 வயது சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்..!!

0

பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியில் 13 வயது சிறுவன் இணைய சூதாட்டத்தில் £80,000 தொகையை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லங்காஷயர் பகுதியில் குடியிருக்கும் குறித்த 13 வயது சிறுவன் இணையத்தில் உலாவரும் விளம்பரங்களை நம்பி சிறு சிறு தொகைக்கு பெட் கட்டி வந்துள்ளார்.

மட்டுமின்றி தமது தந்தையின் வணிக கடன் அட்டைகளை பயன்படுத்தி சூதாட்டத்திற்கு என தனியாக ஒரு கணக்கையும் துவங்கியுள்ளார்.

இந்த நிலையில் விளையாட்டு தொடர்பான இணையதள சூதாட்டத்தில் அடிமையான குறித்த சிறுவன் கால்பந்து விளையாட்டு மற்றும் குதிரை பந்தையம் உள்ளிட்டவைகளில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கான முறை பணம் செலுத்தியுள்ளார்.

வாரந்தோறும் சுமார் 3,000 பவுண்ட்ஸ் வரை குறித்த சிறுவன் சூதாட்டத்தில் செலவிட்டு வந்துள்ளார்.

சூதாட்டம் நம்மை போதை மருந்து, மது போன்று அடிமையாக்கும் என்பது தமக்கு தெரியாமல் போனது எனவும், இது ஒரு பொழுதுபோக்கு என்றும், ஆனால் பணம் சம்பாதிக்கும் வழி எனவும் தாம் கருதியிருந்ததாக குறித்த சிறுவன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்திருந்தான்.

இதனிடையே இந்த விவகாரம் அவரது குடும்பத்தில் பூதாகாரமாக வெடிக்க, தற்போது சிறுவன் உளவியல் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆனால் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்துவரும் அவரது தந்தையின் கடன் அட்டையில் இருந்து சுமார் £80,000 தொகையை சிறுவன் இழந்திருந்தான்.

ஒட்டுமொத்த பிரித்தானியாவில் 11 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 25,000 பேர் இணையதள சூதாட்டத்தில் அடிமையாக இருக்கின்றனர் என அரசாங்க ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இணைய சூதாட்டத்தில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்க சட்டங்களை திருத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் பல கோரிக்கை முன்வைத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − three =

*