;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள அமேஷானின் செயற்பாடு..!!

0

அமேஷான் நிறுவனம் ஒன்லைன் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பல்வேறு இணையத்தளங்களைக் கொண்டுள்ளது.

அதாவது சர்வதேச அளவிலும், சில குறிப்பிட்ட நாடுகளுக்காக அந்த நாடுகளின் ஆள்களப் பெயரிலும் (Domain Name) இணையத்தளங்களைக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறிருக்கையில் அவுஸ்திரேலியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலிய ஆள்களப் பெயர் கொண்ட அமேஷானின் இணையத்தளத்தில் மாத்திரம் கொள்வனவு செய்ய முடியும்.

சர்வதேச இணையத்தளத்தில் (.com) கொள்வனவு செய்ய முடியாது.

அவ்வாறு சர்வதேச இணையத்தள முகவரிக்கு செல்லும்போது அது தானாகவே அவுஸ்திரேலிய ஆள்களப் பெயர் கொண்ட இணைய முகவரிக்கு மாற்றமடையும் (Redirect).

இதேவேளை வரியினை உரிய முறையில் அறவிட்டுக்கொள்வதற்காகவே இப் புதிய முறை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 1 =

*