;
Athirady Tamil News

மன்னாரில் 8ஆவது நாளாகவும் மனித எலும்புகளைத் தேடி அகழ்வு..!!

0

மன்னார், சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணி இன்று (புதன்கிழமை) எட்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த அகழ்வு பணிகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் பார்வையிட்டிருந்தனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அகழ்வு பணிகள் இன்று 8 ஆவது நாளாகவும், காலை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்று வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை காலை 7 மணியளவில் அராம்பிக்ப்பட்ட அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இன்று மாலை வரை இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியான அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள்,பற்கள்,தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 12 =

*