;
Athirady Tamil News

யாழில் காவலாளிக்கு ஏற்பட்ட சோகம்..!!

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் காவலாளி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சுன்னாகம் கால்நடை மருத்துவமனையில் இன்று அதிகாலையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மருத்துவமனையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நால்வர் கொண்ட குழு கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் அணிந்திருந்த சங்கிலியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 18 =

*