;
Athirady Tamil News

பெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18)

0


சிற்றின்ப இச்சைக்கு வடிகால் கிடைக்காத போது, மனித குலத்தின் ஒரு மறைமுகமான நடவடிக்கையாகத்தான் இருந்து வருகிறது சுயஇன்பம்.

இது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும், இயற்கைக்கு எதிரானதாகவுமே கற்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தாங்கள் சுய இன்பத்துக்கு பழக்கப்பட்ட ஒரு பெண்ணை தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது.

உடலியல் பற்றி அறிந்திராத அந்த பெண்ணின் அறிவுப் பற்றாக்குறையே இதற்கு காரணம் ஆகும்.

பெண் உடலும் சுயஇன்பமும்..

பெண் உடல் என்பது பாலியல் உறவுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்ட உலக நியதியில்,சுய இன்பத்தை தவறான ஒன்றாகவும், கெட்ட பழக்கமாகவும் நம்புவதில் வியப்பு என்ன இருக்க முடியும்.

இந்த நம்பிக்கையும், அறியாமையும் சுய இன்பத்தால் விளையும் பலன்களை அனுபவிப்பதற்கு தடையாக இருந்து கொண்டிருக்கிறது.

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும், மாதவிடாய் காலத்தில் நெட்டித் தள்ளக்கூடிய வலிகளையும் போக்கும் ஒரு உடலியல் ரீதியான இயக்கம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இப்போதெல்லாம் அந்த வரலாறு மாறி வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் சுய இன்பத்தால் விளையும் நன்மைகளை அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

சுய இன்பம் உங்கள் நல்வாழ்வை மேலும் வலிமைப்படுத்துவதாக உளவியலாளர்களும், பாலியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள்.

மனநிலையை மேம்படுத்தும்…

பெண்களின் மனநிலையை மேம்படுத்தும் ஒரு கருவியாக சுயஇன்பம் இருக்கிறது.

கையாளும் முறை சிறப்பாக இருந்தால் மன அழுத்தங்களில் இருந்து வெளியேறலாம்.

சுய இன்பத்தின் போது வெளியேறும் என்டோர்பின்சென்ட் செரோடோனின், நரம்பியல் கடத்திகளாக செயல்பட்டு, ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நோய் தொற்றுக்கு தடை..

பிறப்புறுப்பில் தொற்று நோய்களை தடுக்கக்கூடிய கவசமாக சுய இன்பம் பரிந்துரைக்கப்படுகிறது.

யோனியில் திரண்டு நிற்கும் பாக்டீரியாக்களை விடுவிப்பதோடு, சிறுநீர் பாதையில் நோய்த் தொற்றுக்களை தடுத்து நிறுத்தும் வல்லமையும் சுய இன்பத்துக்கு இருக்கிறதாம்.

சுய இன்பத்தின் போது தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி, பெண்களுக்கு நல்வாழ்வுக்கான மறு மலர்ச்சியை உருவாக்குகிறது.

ஆழ்ந்த உறக்கம்..

பெண்களின் ஆழ்ந்த உறக்கத்துக்கு சுய இன்பம் உதவுகிறது.

திருப்திகரமான சுய இன்பத்தை அனுபவித்த பெண், போதுமான அளவுக்கு நல்ல தூக்கத்தை பெறுவதாகச் சொல்கிறார்கள்.

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள்.

அப்போது வெளியேறும் ஹார்மோன்கள் உடல் மற்றும் மனத்தளர்ச்சியை போக்கி பரமானந்த நிலைக்கு அவர்களை கொண்டு செல்கிறது.

வலி நிவாரணி..

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலிக்கு தீர்வு தரும் அற்புதம் சுயஇன்பத்தில் ஒளிந்திருக்கிறது.

தசைப்பிடிப்பை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், கர்ப்பிணிகளுக்கு இயற்கையான வலி நிவாரணியாகவும் திகழ்கிறது.

உடலுக்குள் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டி வயிற்று வலியிலிருந்தும், வீக்கத்திலிருந்தும் விடுதலை செய்கிறது.

உச்ச நிலை..

பாலியல் உறவுகளில் உச்சக்கட்ட திருப்திக்கு சுய இன்பம் ஒரு சிறந்த செயலி.

உடல்நிலையை நன்கு அறிந்தவர்களுக்கும், அச்சமில்லாமலும் அனாயாசமாகவும் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் உச்சக்கட்ட திருப்தியை அடைவது உண்டு.

உடலுறவில் புதிய பரிமாணங்களை முயற்சி செய்யவும், சிற்றின்பத்தை முழுமையாக அனுபவிக்கவும் சுய இன்பம் ஒரு நல்ல வயாக்கராவாக இருக்கிறது.

பரவச நிலை..

உடலில் அன்றாடம் ஏற்படும் மாற்றங்களை அனுமானிக்க சுய இன்பம் அவசியமான ஒன்று.

கரடு முரடான நிலையிலிருந்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

இடுப்பு மடிப்புகளில் ஏற்படும் தசைகளை சீராக இயங்கச் செய்கிறது.

உணர்ச்சிகளை தூண்டி விடுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் ஏறத்தாழ 8 ஆயிரம் நரம்பு முடிச்சுகளையும் அது உற்சாகப்படுத்துகிறது.

தசை சுருக்கம்..

உடலுறவின் போது திருப்தியடையாத பெண்களுக்கு சுய இன்பம் ஒரு முக்கியமான நல்ல அணுகுமுறையாகும்.

பிறப்புறுப்பில் உள்ள தசை சுருக்கத்துக்கு தீர்வை உருவாக்கி உடலுறவில் திருப்தி காண உதவுகிறது.

வேண்டாமையாக கருதும் அனார்கேஸ்மியா மற்றும் வெஜினிஸ்மஸ்ஸை தவிர்க்க சுயஇன்பம் உதவி புரிகிறது.

கலோரிகளை குறைக்க..

உடலில் சேரும் கலோரிகளை குறைப்பது பெண்களுக்கு நன்மை பயக்கும்.

சுய இன்பத்தில் ஈடுபடும்போது 170 கலோரிகள்வரை குறைகிறது.

ஆதலால் சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகளை அனுபவிக்க எந்தப் பயமும் உங்களுக்குத் தேவையில்லை.

யார் விரும்புகிறார்களோ, இல்லையோ உங்கள் உடலை அறிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் உங்களுக்கு முழு உரிமை உண்டு.

ஆதலால் வரைவறைகளையும், கட்டுப்பாடுகளையும், கற்பிதங்களையும் தூக்கி எறிந்து விட்டு உணர்ச்சிகளை போதுமானவரை அனுபவித்து மகிழ்ச்சியடையுங்கள்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + one =

*