;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பள்ளி பெண் உதவியாளர்களிடம் தகாத முறையில் செயல்படும் மாணவர்கள்: அதிர்ச்சி ஆய்வு..!!

0

பிரித்தானியாவில் பள்ளி பெண் உதவியாளர்களில் பத்தில் ஒருவர் மாணவர்களால், அதுவும் ஒன்பது வயதே நிரம்பிய சிறுவர்களாலும்கூட பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாவதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறுபவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட பலர் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாவதாக GMB union மேற்கொண்ட ஆய்வு வெளியிட்ட தகவல் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட மாணவர்களை உடைகளை உடுத்துமாறு வற்புறுத்திய ஊழியர் ஒருவர், முறை தவறி நடப்பவர் என மாணவர்களால் பட்டமளிக்கப்பட்டார்

தங்களைவிட பல வயது மூத்த பெண்களை தவறான இடங்களில் தொடுவதும், அவர்களை ஆபாசமாக வர்ணிப்பதும் பல முறை புகாரளிக்கப்பட்டுள்ளது.

உச்ச கட்டமாக பையன்கள் தன்னை தங்களுடன் பாலுறவு கொள்ள அழைத்ததாகக் கூறும் ஒரு உதவியாளர் அதை அவர்கள் உதவியாளர்களின் வேலையின் ஒரு பகுதியாக கருதுவதாகத் தெரிவிக்கிறார்.தவறான உறவு முறைகளை மாணவர்கள் சகஜமாக எடுத்துக் கொள்ளும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.

சமீபத்தில் அந்த உதவியாளர் தனது தந்தையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்வதாக தனது மாணவர்களிடம் கூற தனது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக பாலுறவைக் கொடுப்பாரா என்று ஒரு மாணவன் சர்வ சாதாரணமாக கேட்டதாக அவர் தெரிவிக்கிறார்

GMBயின் Karen Leonard கூறும்போது, மாணவர்களின் அளவு மீறிய பாலியல் தொந்தரவுகளால் பல பெண் ஊழியர்கள் மனதளவில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

தாயின் வயதொத்த பெண்களிடம், மிகவும் சிறு வயது மாணவர்கள்கூட தவறாக நடந்து கொள்வதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு சமுதாயத்தை ஆரோக்கியமான மன நிலைமையுடன் எதிர் கொள்ளப் போகிறார்கள் என்னும் கேள்வியை உருவாக்கியுள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 6 =

*