இலங்கை ஜெர்மன் பயிற்சிக்கல்லுரிக்கு இயந்திரம் கையளிப்பு..!! (படங்கள்)

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை ஜெர்மன் பயிற்சிக்கல்லுரிக்கு சல்டேக் ஓயில் கம்பனி பொதுமுகாமையாலரால் இயந்திரம் ஒன்று கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இன்று காலை பத்துமணிக்கு இலங்கை ஜெர்மன் பயிற்சிக்கல்லுரி வளாகத்தில் இடம்பெற்ற இன் நிகழ்விலையே குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது
ஓட்டோ மொபைல் பயிற்சி நெறியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வாகன இயந்திரம் எவ்வாறு இயங்குகின்றது என தெளிவாக சிறந்த பயிற்சியினைப் பெரும் முகமாகவே இவ் வாகன இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது
இன் நிகழ்வில் இலங்கை ஜெர்மன் பயிற்சிக்கல்லுரி அதிபர் , விரிவுரையாளர்கள் மாணவர்கள் , சல்டேக் ஓயில் கம்பனி பொதுமுகாமையாளர் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…