;
Athirady Tamil News

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

0

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடிவிட வேண்டும் எனக் கோரி இன்று (புதன்கிழமை) கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதிப் பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான தமது கோஷங்களை எழுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 2 =

*