ஆந்திர காவல் நிலையத்தில் தமிழக வாலிபர் மரணம் – போலீஸ் தாக்கியதில் இறந்ததாக தகவல்.!!

ஆந்திர மாநிலம் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அனைவரையும் போலீசார் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதில், ராஜா (24) என்ற வாலிபர் உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்த ராஜா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர காவல் நிலையத்தில் தமிழக வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது