;
Athirady Tamil News

வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் – போக்குவாரத்து பொலிஸ் பிரிவு..!!

0

வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைத்துகொள்வதற்கு முறையான வீதி ஒழுங்குகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகள் வாகனங்களின் வேகத்தினை குறைக்குமாறும் போக்குவாரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து உப பொலிஸ் அத்தியச்சகர் சஞ்சீவ சில்வா குறிப்பிடுகையில்,

கடந்த இரு மாதங்களில காலை மற்றும் மாலை வேலைகளில் மழையுடனான காலநிலை நிலவுவதனால் வீதி விபத்துக்கள் ஏனைய நாட்களை விட சற்று அதிகமாகவே பதிவாகுகின்றது. வீதி விபத்துக்களால் பிரதான வீதிகளில் வாகன நெரிசல்களையும் காணக்கூடியதாகவுள்ளது.

வீதி விபத்துக்கள் மட்டுபடுத்த வேண்டுமானால் வீதி ஒழுங்குகளை முறையாக பயன்படுத்தல் மற்றும் வாகனங்களின் பிரயாண வேகத்தினை மட்டுபடுத்துவது அவசியமாகும். வாகன சாரதிகள் வீதி ஒழுங்குகளை மீறும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான உரிய தண்டனைகள் போக்குவாரத்து பொலிஸ் பிரிவால் பெற்றுதரப்படும்.

மேலும், வீதி ஒழுங்குகளை அவதானிப்பதற்கென வழமைக்கு மாறான அளவில் போக்குவரத்து பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக வாகன நெரிசலை வீதிகளில் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் விபத்துக்களை குறைத்து கொள்வதற்காகவே அவ்வாறான நேரங்களில் போக்குவரத்து பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என குறிப்பிட்டார்.

வாகன விபத்துக்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. விபத்துக்கள் எதிர்பாராமல் நிகழ்வதால் தான் போக்குவரத்துகளுக்னெ சில ஒழுங்குகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான பாதைகளில் மிதிவண்டிகள் மற்றும் விலங்குகளின் நடமாற்றம் , பாதை சாரிகள் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிக்காமை, வாகன சாரதிகளின் கவனயீனம் போன்ற விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

இவ்வாறான விடயங்களால் ஏற்படும் விபத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் வீதிகளில் பயணிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுதல் அவசிமாகும். முறையான வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்தல் அவசியமாக கொள்ளப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*