;
Athirady Tamil News

மண்மேடு சரிந்ததில் ஆண் குழந்தை பலி..!!

0

தெரணியகல பொலிஸ் பிரிவு, உட மாலிகொட பிரதேசத்தில், மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில், நான்கரை வயது ஆண் குழந்தை பலியாகியுள்ளதுடன், சிசுவின் தாய் மற்றும் சகோதரர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில், நேற்று (7) பெய்த கடும் மழை காரணமாக, குறித்த வீட்டில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும் மண்ணுள் புதையுண்ட மூவரையும் உயிருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரும் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 17 =

*