;
Athirady Tamil News

ஊர்காவற்றுறை ஆதிவைரவர் ஆலயத்துக்கு அன்னதான மண்டப பொருட்கள்..!!

0


ஊர்காவற்றுறை ஆதிவைரவர் ஆலயத்துக்கு அன்னதான மண்டப பொருட்கள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

தீவகம், ஊர்காவற்றுறை ஆதிவைரவர் ஆலயத்துக்கு தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.50,000/= பெறுமதியான அன்னதான மண்டபத்துக்குத்தேவையான சமையல் பாத்திரங்கள் மற்றும் பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார்.

இன்று 07.06.2018 காலை 10 மணியளவில் தீவகம் வடக்கு (ஊர்காவற்றுறை) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ; ஊர்காவற்றுறை ஆதிவைரவர் ஆலய நிர்வாகத்தினரிடம் வழ்னக்கி வைத்தார்.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் தீவகம் வடக்கு (ஊர்காவற்றுறை) பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஷன், ஊர்காவற்றுறை ஆதிவைரவர் ஆலய நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 5 =

*