போலீசிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவருக்கு 5 லட்சம் பரிசு..!!

ஜார்கண்ட் மாநிலம், லேட்ஹர் மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் போலீசாரின் 214 படைப்பிரிவு முகாமில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்சியில் போலீஸ் டி.ஜி.பி.விபுல் சுக்லா மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி. ஜயந்த் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள், முன்னிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த விரேந்திர அலியாஸ் சங்கர் எனும் நபர் போலீசாரிடம் சரணடைந்தர். இவரின் தலைக்கு 5 லட்சம் ரூபாய் போலீசாரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாமாகவே விரேந்திர அலியாஸ் சங்கர் போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.