;
Athirady Tamil News

மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?..!!

0

மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி மெர்க்கலிடம் $700,000 மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதில் மெர்க்கல் திருமணத்தின் போது அணிந்திருந்த வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சேர்க்கப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

குறித்த கிரீடத்தின் விலை மட்டும் $600,000 என பிரபல பத்திரிக்கையான Daily Mail தகவல் வெளியிட்டுள்ளது

அதே போல இளவரசர் ஹரி வடிவமைப்பில் உருவான மெர்க்கலின் நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு குறைந்தபட்சம் $187,000 ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க நகைகள் என்றால் மெர்க்கல் அணியும் $322,211 மதிப்பிலான பிரேஸ்லெட் மற்றும் $80,000 காது தோடுகள் முக்கியமானதாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + seven =

*