;
Athirady Tamil News

நுவரெலியா : நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ் மற்றும் லொறி..!!

ஐவர் காயம்

0

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஐவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து உடப்புஸ்ஸலாவ பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும், கோணப்பிட்டியவிலிருந்து நுவரெலியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியுமே, நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ்ஸில் மோதுண்ட லொறி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

குறித்த விபத்தின் போது, தனியார் பஸ்ஸில் பயணித்தவர்களில் இருவரும், லொறியில் பயணித்த மூவருமே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 9 =

*