றுகுணு பல்கக்லைகழ பீடங்கள் ஐந்து காலவரையறை இன்றி மூடல்..!!

றுகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து பீடங்களை காலவரையறையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மாணவர்கள் சிலரின் ஒழுக்கமற்ற நடத்தை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக றுகுணு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் காமினி சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், வெல்லமடம வளாகத்தில் தொழில்நுட்பம், முகாமைத்துவ மற்றும் நிதி, மனிதவள மற்றும் சமூக விஞ்ஞான, மீன்பிடி மற்றும் கடல்வளம், விஞ்ஞான பீடம் ஆகிய பீடங்களே இவ்வாறு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.