;
Athirady Tamil News

முதல் கணவனை கொன்று புதைத்த மனைவி: 21 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!

0

ரஷ்யாவில் கணவர் ஒருவரின் வீட்டு தோட்டத்தில் எலும்புகூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் அது மனைவியின் முதல் கணவரின் உடல் என தெரியவந்துள்ளது.

60 வயதான பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், கணவர் சமீபத்தில் வீட்டு தோட்டத்தில் உருளைகிழங்கு செடியை நடுவதற்காக மண்ணை தோண்டியுள்ளார்.

அப்போது மண் உள்ளே ஒரு மண்டை ஓடு இருந்துள்ளது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் இது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார்

அப்போது, அந்த மண்டை ஓடு தனது முதல் கணவருடையது எனவும் 21 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடன் தனக்கு சண்டை ஏற்பட்டதால் அவரை கோடாரியால் அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்ததாக மனைவி கூறியுள்ளார்.

இதை கேட்டு பதறிய கணவர் உடனடியாக பொலிசாரிடம் சென்று மனைவியின் செயல் குறித்து புகாரளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குற்றவாளியை வீட்டு காவலில் வைத்து விசாரித்தனர்.அப்போது முதல் கணவரை எப்படி கொன்று புதைத்தேன் என அவர் பொலிசாரிடம் செய்து காட்டினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*