;
Athirady Tamil News

ராணுவத்தில் களமிறங்கும் ரோபோக்கள்: அமெரிக்காவின் அதிரடி திட்டம்..!!

0

அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, அந்நாட்டு ராணுவத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன், நீண்ட காலமாக ரோபோக்கள் குறித்த ஆராய்ச்சியை செய்து வருகிறது. Artificial Intelligence எனும் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களை பென்டகன் வடிவமைத்து வருகிறது

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, அணு ஆயுத தாக்குதலை முன்பே கணிக்கும் ரோபோக்களை உருவாக்கவும் அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

ராணுவத்தில் குறைந்த அளவு மனிதர்களையும், அதிகளவு ரோபோக்களையும் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும் என்றும், ரோபோக்களின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 9 =

*