நாட்டு மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை..!!

இலங்கை முழுவதும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைரஸ் தொற்றிற்காக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெற்கில் பரவும் இந்த நோய் காரணமாக சப்ரகமுவ மாகாண மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் இன்புளுவென்சா தொற்று பரவியுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது தெற்கில் பரவும் இன்புளுவென்சா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொற்று குறித்து மக்கள் பெரிதாக அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. சளி, இருமல், காய்ச்சலினால் இந்த நோய் பரவ முடியும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். அதேபோல் கைக்குட்டை பயன்படுத்துங்கள். முடிந்தளவு மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்