;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் அதிபரின் கோரிக்கையை ஏற்று 3 நாள் போர் நிறுத்தம் – தலிபான் அறிவிப்பு..!!

0

ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுவதாகவும், இதர வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக இன்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அறிவித்துள்ள போர் நிறுத்தம் எந்த நாளில் துவங்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 2 =

*