;
Athirady Tamil News

மட்டக்களப்பில் ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

0

மட்டக்களப்பு, பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூடத்திற்குள் ஆண் ஒருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த சுரேந்திரன்(48வயது) என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் தற்கொலைசெய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்தார்களா என்ற கோணத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 4 =

*