;
Athirady Tamil News

டெல்லியில் பட்டப்பகலில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை – 4 ரவுடிகள் கொல்லப்பட்டனர்..!!

0

டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி என்பவனின் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் இன்று சத்தார்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் ‘தலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடிகள்’ என தெரியவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் இன்று ரவுடிகளுக்கும், போலீசாருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் சத்தார்பூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + twenty =

*