;
Athirady Tamil News

வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் காலமானார்..!!

0

வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் காலமானார். நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு உறுப்பினரான இ.குமாரசாமி நேற்று மதியம் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு கடந்த 2011 ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்ததோடு இந்ந வருடம் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்துள்ளார்.

கூட்டுறவாளரான இவர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தார் மற்றும் நிதி உதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தார்.

இவர் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினருமாவார். இவரது இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று மதியம் 2.00 மணிக்கு சுன்னாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 3 =

*