;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் பெண்ணின் உயிரை பறித்த மாதுளை விதைகள்..!!

0

அவுஸ்திரேலியாவில் ஹெபடைடிஸ் ஏ நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் மாதுளை விதைகளை உணவாக எடுத்துக் கொண்டதால் மரணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தென் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இது மிகவும் அபூர்வமானது மற்றும் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பகுதியில் உள்ள 64 வயது பெண்மணி ஒருவர் உறையவைக்கப்பட்ட மாதுளை விதைகளை உணவாக எடுத்துள்ளார்.

குறித்த மாதுளை விதைகளானது எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நிறுவனத்தின் மாதுளை பாக்கெட்டுகளை வணிக வளாகங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை நாடு முழுவதும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

குறித்த மாதுளை விதைகளை உணவாக எடுத்துக் கொண்ட 24 பேருக்கு ஹெபடைடிஸ் ஏ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 2000 பாக்கெட்டுகள் நாடு முழுவதும் குறித்த நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.உள்ளூரில் விளைவித்த மாதுளையில் ஹெபடைடிஸ் ஏ பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒருவருக்கு ஹெபடைடிஸ் ஏ பாதிப்பு ஏற்பட்டதாக அறிகுறிகள் தெரியவரவே 15 முதல் 50 நாட்கள் ஆகும் எனவும்,இதனால் குமட்டல், வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 2 =

*