;
Athirady Tamil News

லங்கா இ நியூஸ் இணையத்தள ஆசிரியரை நாடுகடத்துமாறு பிரித்தானியாவிடம் மைத்திரி கோரிக்கை..!!

0

லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும், லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்குத் திருப்பி அனுப்புமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிடம் கோரியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசை நேற்று பஜெட் வீதியில் உள்ள தமது இல்லத்துக்கு அழைத்த இலங்கை ஜனாதிபதி அவருடன் நடத்திய சுமார் 30 நிமிடச் சந்திப்பின் போதே இவ்வாறு கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை ஜனாதிபதியின் இணைப்புச் செயலர் சிறிலால் லக்திலக, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் பங்கேற்றனர்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த லங்கா இ நியூஸ் இணையத்தளம், கடந்த நவம்பர் மாதம், தொடக்கம் இலங்கைவில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் இலங்கைவில் தடை செய்யப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்ட லங்கா இ நியூஸ், இலங்கைவுக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதால், அதன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − seven =

*