;
Athirady Tamil News

தொடர்ந்தும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு முக்கிய அறிவித்தல்..!!

0

சப்ரகமுவ மற்றும் மத்திய மலைநாட்டில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலியில் இருந்து கொழும்பு புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் இடையிடையே மணித்தியாலத்திற்கு 50 – 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − seven =

*